TNPSC Thervupettagam

ஜன் விஸ்வாஸ் திருத்த மசோதா 2025

March 20 , 2026 11 hrs 0 min 20 0
  • விரிவான பரிந்துரைகள் மற்றும் மேம்பாடுகளைச் சேர்ப்பதற்காக, தேர்வுக் குழுவின் ஆய்வுக்குப் பிறகு ஜன் விஸ்வாஸ் (திருத்த) மசோதா, 2025-ஐ அரசாங்கம் மக்களவையிலிருந்து திரும்பப் பெற்றது.
  • சிறைத்தண்டனை விதிகளுக்குப் பதிலாக பண அபராதங்களை விதிப்பதன் மூலம் பல்வேறு சட்டங்களின் கீழான சிறிய குற்றங்களை குற்றமற்றதாக மாற்றுவதை இந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது நீதிமன்றங்களின் சுமையைக் குறைக்கவும், வழக்குகளைக் குறைக்கவும் மற்றும் இந்தியாவில் தொழில் புரிவதை எளிதாக்கவும் முயல்கிறது.
  • மசோதாவைத் திரும்பப் பெறுவது என்பது ஒரு நடைமுறை நடவடிக்கையாகும் என்பதோடு இது அரசாங்கத்தை மசோதாவைத் திருத்தவும், மெருகேற்றவும் மற்றும் வலுவான விதிகளுடன் மீண்டும் அறிமுகப்படுத்தவும் அனுமதிக்கிறது.
  • இந்த நடவடிக்கை நம்பிக்கை அடிப்படையிலான நிர்வாகம், ஒழுங்குமுறை எளிமைப்படுத்தல் மற்றும் இணக்கமான சூழலை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கிய மாற்றத்தைப் பிரதிபலிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்