TNPSC Thervupettagam

ஜன் விஸ்வாஸ் மசோதா 2026

April 4 , 2026 2 days 104 0
  • சட்ட விதிகளை சீர்திருத்துவதற்காக 'ஜன் விஸ்வாஸ் (திருத்தச் சட்ட) மசோதா 2026'-ஐ மக்களவை நிறைவேற்றியுள்ளது.
  • இந்த மசோதா சிறு குற்றங்களை குற்றமற்றதாக்குவதையும், தொழில் செய்வதை எளிதாக்குவதையும் மற்றும் வாழ்க்கை முறையை எளிதாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது 23 மத்திய அமைச்சகங்களால் நிர்வகிக்கப்படும் 79 மத்திய சட்டங்களைத் திருத்த முன்மொழிகிறது.
  • மொத்தம் 784 விதிகள் திருத்தப்பட்டுள்ளன; இதில் 717 விதிகள் குற்றமற்றதாக்கப் பட்டுள்ளன மற்றும் 67 விதிகள் எளிதான வாழ்க்கைக்காக மாற்றப்பட்டுள்ளன.
  • இது சிறு குற்றங்களுக்கான சிறைத் தண்டனைக்கு பதிலாக, குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப பண ரீதியான அபராதங்களை மாற்றீடு செய்கிறது.
  • பழைய சட்டங்களை எளிமைப்படுத்துதல், நீதிமன்ற வழக்குகளைக் குறைத்தல் மற்றும் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட நிர்வாகத்தை மேம்படுத்துவதில் இந்த மசோதா கவனம் செலுத்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்