இந்தியாவின் டிஜிட்டல் கட்டண முறைமையான UPI (ஒருங்கிணைந்த பண வழங்கீட்டு இடைமுகம்) ஆனது 2026-ஆம் ஆண்டில் ஜப்பானில் தொடங்கப்பட உள்ளது.
இந்தியச் சுற்றுலாப் பயணிகள் தங்கள் இந்திய வங்கிக் கணக்குகளிலிருந்து நேரடியாகப் பணம் செலுத்தும் வகையில், இது முதலில் அவர்களிடையே சோதனை செய்யப்படும்.
இந்தத் திட்டம் ஜப்பானின் NTT Data மற்றும் இந்திய தேசிய கொடுப்பணவுக் கழகம் (NPCI) ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு கூட்டாண்மையின் விளைவு ஆகும்.
பூட்டான், சிங்கப்பூர், நேபாளம், ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை, கத்தார், மொரிஷியஸ் மற்றும் பிரான்ஸ் உட்பட எட்டு நாடுகளில் UPI ஏற்கனவே செயல் பாட்டில் உள்ளது.
2016ம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்ட UPI ஆனது உலகின் மிகப்பெரிய நிகழ்நேரக் கட்டண முறைமையாகும்.