கர்நாடகா அரசானது, குடகு மாவட்டத்தில் ஜம்மா பேன் நிலங்களை சீர்திருத்த அதன் நில வருவாய் சட்டத்தைத் திருத்தியது.
கர்நாடக நில வருவாய் (இரண்டாவது திருத்தம்) சட்டம், 2025, ஜனவரி 7, 2026 அன்று ஆளுநரின் ஒப்புதலைப் பெற்றது.
ஜம்மா பேன் நிலங்கள் கூர்க் மன்னர்களாலும் பின்னர் ஆங்கிலேயர்களாலும் வழங்கப் பட்ட பரம்பரை உடைமைகளாகும், அவை பெரும்பாலும் நெல் வயல்கள் மற்றும் காடுகள் நிறைந்த மேட்டு நிலங்கள் உட்பட இராணுவ சேவைக்காக வழங்கப்பட்டன.
மரபார்ந்தப் பதிவுகள் அசல் மூதாதையர்களை உரிமையாளர்களாகப் பட்டியலிட்டு உள்ளதால், நில பட்டா மாற்றம், பரம்பரை, விற்பனை மற்றும் வங்கி கடன் அணுகலில் சட்ட சிக்கல்களை உருவாக்குகிறது.
இந்தத் திருத்தம், உரிய விசாரணைக்குப் பிறகு உரிமைகள் பதிவேட்டில் உள்ள முரண்பாடுகளை சரி செய்ய தாசில்தார்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.
இது குடகின் பதிவுகளை கர்நாடக நில வருவாய் சட்டம், 1964 உடன் இணைக்கிறது மற்றும் புதுப்பிக்கப்பட்ட, சட்டப்பூர்வ நில உரிமைக்காக பூமி டிஜிட்டல் மயமாக்கலை ஆதரிக்கிறது.