2020 ஆம் ஆண்டு ஆணையானது எந்தவொரு நபர் கடந்த 15 ஆண்டுகளாக ஜம்மு ஜாஷ்மீர் ஒன்றியப் பிரதேசத்தில் வசிக்கின்றாரோ அல்லது கடந்த ஏழு ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பிரதேசத்தில் படித்து, அங்குள்ள கல்வி நிறுவனத்தில் 10வது/12வது தேர்வை எதிர் கொண்டாரோ அல்லது நிவாரண மற்றும் புனர்வாழ்வு ஆணையினரால் புலம்பெயர்ந்தோராகப் பதிவு செய்யப்பட்ட நபரோ அவரைச் சட்டப்படியான வாழ்வகத்தைக் கொண்டு உள்ள நபர் என்று வரையறை செய்கின்றது.
மேலும் இது அகில இந்தியப் பணி, பொதுத் துறை நிறுவனங்கள், மத்திய அரசின் தனிச் சுதந்திர அமைப்புகள், பொதுத் துறை வங்கிகள், சட்டப்பூர்வ அமைப்புகளின் அதிகாரிகள், மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்திய அரசினால் அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சி மையங்கள் உள்ளிட்ட பணிப் பிரிவுகளில் “மொத்தம் 10 ஆண்டுகள் அங்கு தங்கியிருந்துப் பணி புரிந்துக் கொண்டு இருக்கும் மத்திய அரசு அலுவலர்களின் குழந்தைகள் அனைவரையும் சட்டப்பூர்வ வாழ்வகத்தைப் பெறத் தகுதியுடையவர்” என்று கூறுகின்றது.
மேலும் “சட்டப்பூர்வ வாழ்வகம்” என்ற அங்கீகாரமானது “பணி தொடர்பாக (அ) வணிகம் அல்லது இதர தொழில்சார் அல்லது தொழில்முறை காரணங்களுக்காக ஜம்மு காஷ்மீருக்கு வெளியே வாழும் இந்த ஒன்றியப் பிரதேச பெற்றோர்களின் குழந்தைகளுக்கும் பொருந்தும். ஆனால் இவர்களது பெற்றோர்கள் மேலே வழங்கப்பட்டுள்ள நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.