ஜம்மு காஷ்மீர் இட ஒதுக்கீட்டு (திருத்த) மசோதா, 2014
January 29 , 2019 2470 days 771 0
ஜம்மு காஷ்மீர் இடஒதுக்கீட்டு (திருத்த) மசோதா 2014-ற்கு ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் தனது இசைவைத் தெரிவித்துள்ளார்.
இந்த திருத்த மசோதாவானது பகாரி சமூகத்தினருக்கு அரசாங்கப் பணிகளில் இடஒதுக்கீட்டை அளிக்கும்.
இந்த திருத்தமானது சமூகம் மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய வகுப்பினர் மத்தியில் பகாரி சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு என்று ஒரு தனிப்பட்ட பிரிவை உருவாக்குகிறது.
பஹாரி சமூகமானது பஹாடி மற்றும் பர்பாட்டி என்றும் அழைக்கப்படுகிறது. நேபாளம் மற்றும் இந்தியாவின் இமயமலைப் பகுதிகளில் வாழும் இவர்கள் இந்தோ – ஆசிய இனத்தைச் சேர்ந்தவர்களாவர்.