TNPSC Thervupettagam

ஜம்மு மற்றும் காஷ்மீரில் புதிய ரேடார்கள்

September 11 , 2025 11 days 74 0
  • வானிலை முன்னறிவிப்பு மற்றும் முன் எச்சரிக்கை அமைப்புகளை மேம்படுத்துவதற்காக மௌசம் திட்டத்தின் கீழ் ஜம்மு மற்றும் காஷ்மீரில் நான்கு கூடுதல் வானிலை ரேடார்கள் நிறுவப்பட உள்ளன.
  • தற்போது, ​​ஜம்மு மற்றும் காஷ்மீர் ஒன்றியப் பிரதேசங்களில் மூன்று ரேடார்கள் செயல்பாட்டில் உள்ளன.
  • திடீர் வானிலை மாற்றங்கள் ஆனது, கடுமையான மழை மற்றும் வெள்ளத்தை ஏற்படுத்துதல் குறித்து எச்சரிக்கை செய்வதற்கான முதன்மை நேரத்தை அதிகரிப்பதை இந்த நிறுவல் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரையிலான பருவமழை நாடு முழுவதும் இயல்பை விட 6% அதிகமாக பதிவானது.
  • ஜம்மு, காஷ்மீர், உத்தரக்காண்ட், பஞ்சாப், ஹரியானா, இராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் மற்றும் டெல்லி உள்ளிட்ட வடமேற்கு இந்தியாவில் வழக்கத்தை விட 26% அதிக மழைப் பொழிவு பதிவாகியுள்ளது.
  • மத்தியத் தரைக் கடலில் இருந்து மேற்கு நோக்கி வரும் காற்றுகள்/இடையூறுகள் மற்றும் வங்காள விரிகுடாவிலிருந்து வடக்கு நோக்கி நகரும் புயல்களின் இணைவினால் தீவிரப் பருவமழை ஏற்பட்டது.
  • 1980 ஆம் ஆண்டிலிருந்து அதிகரித்து வரும் மழைப் பொழிவு போக்கைத் தொடர்ந்து, செப்டம்பர் மாதம் வரை இந்த தீவிர பருவமழைப் போக்கு தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) எதிர்பார்க்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்