TNPSC Thervupettagam

ஜல்தூத் செயலி

October 2 , 2022 1037 days 1084 0
  • ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சகமானது நிலத்தடி நீர்மட்டத்தைச் சிறந்த முறையில் ஆய்வு செய்வதற்காக வேண்டி “ஜல்தூத் செயலி" மற்றும் ஜல்தூத் செயலி இணையவழிச் சிற்றேடு” ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்தச் செயலியை ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ளன.
  • இந்தச் செயலியானது ஒரு கிராமத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 2-3 கிணறுகளின் நீர் மட்டத்தை ஆய்வு செய்வதற்காக நாடு முழுவதும் பயன்படுத்தப்பட உள்ளது.
  • இந்தச் செயலியானது நாடு முழுவதும் உள்ள நீர்நிலைகளைக் கண்காணிப்பதை எளிதாக்குகிறது.
  • இதன் மூலம் பெறப்படும் தரவுகள் கிராமப் பஞ்சாயத்து மேம்பாட்டுத் திட்டம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் போன்ற  திட்டங்களுக்குப் பயன்படுத்தப் பட உள்ளது.
  • இந்தியாவில் மொத்த நிலத்தடி நீர் வீழ்ச்சியானது 122-199 பில்லியன் மீட்டர் கனசதுர வரம்பில் உள்ளது.
  • 89% நிலத்தடி நீரானது பாசனத் துறையில் பயன்படுத்தப்படுகிறது.
  • இத்துறையானது நாட்டிலேயே அதிகளவில் இதன் மூலம் பயன்பெறும் துறையாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்