TNPSC Thervupettagam

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் சுஜல் காவ்ன் அடையாள எண்

March 16 , 2026 14 hrs 0 min 59 0
  • மத்திய ஜல் சக்தி அமைச்சகம், கிராமப்புற குடிநீர் வழங்கல் திட்டங்களுக்காக சுஜல் காவ்ன் அடையாள எண் எனும் தனித்துவமான டிஜிட்டல் அடையாள அட்டையை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • கண்காணிப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்காக ஜல் ஜீவன் திட்டம் (JJM) 2.0-ன் கீழ் இந்த முன்னெடுப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • ஒவ்வொரு கிராமப்புற குடிநீர் வழங்கல் திட்டமும் வரைபடம் மற்றும் மேலாண்மைக்காக ஒரு தனித்துவமான டிஜிட்டல் அடையாள எண்ணைப் பெறும்.
  • 31 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் சுமார் 1.64 லட்சம் சுஜல் காவ்ன் அடையாள எண்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
  • இந்த அமைப்பு நிகழ்நேரக் கண்காணிப்பு, சிறந்தத் திட்டமிடல் மற்றும் கிராமப்புற நீர் விநியோகத்தை திறம்பட நிர்வகிக்க உதவுகிறது.
  • 2028 ஆம் ஆண்டிற்குள் ஒவ்வொரு கிராமப்புற வீடுகளுக்கும் பாதுகாப்பான குழாய் மூலம் குடிநீர் வழங்குவதை இந்த நோக்கம் இலக்காகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்