ஜல் ஜீவன் திட்டம் (JJM) ஏழு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது, மேலும் ஊரகப் பகுதிகளில் குழாய் வழி குடிநீர் இணைப்பு வசதி 2019 ஆம் ஆண்டில் 16.72 சதவீதத்தில் இருந்து 2026 ஆம் ஆண்டில் 82.24 சதவீதமாக உயர்ந்துள்ளது.
தற்போது 15.91 கோடிக்கும் அதிகமான ஊரகக் குடும்பங்கள் குழாய் வழி குடிநீர் இணைப்புகளைப் பெற்றுள்ளன, இதில் 2019 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட 12.68 கோடி புதிய இணைப்புகளும் அடங்கும்.
1.01 லட்சம் கிராம ஊராட்சிகளுடன், 2.04 லட்சம் கிராமங்கள் ஹர் கர் ஜல் (HGJ - அனைத்து வீடுகளுக்கும் குடிநீர்) என சான்றளிக்கப்பட்டுள்ளன.
மேலும், இத்திட்டத்தின் மூலம் 9.34 லட்சம் பள்ளிகள் மற்றும் 9.73 லட்சம் அங்கன்வாடி மையங்களுக்கும் குழாய் வழி குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
ஜல் ஜீவன் திட்டம் 2.0-ஆனது, முறையான சேவைகளை வழங்குதல், நீர் ஆதார நிலைத் தன்மை, மக்கள் பங்கேற்பு மற்றும் நீண்டகாலச் செயல்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.
மத்திய அரசு ஜல் ஜீவன் இயக்கத்தை 2028 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை நீட்டித்து உள்ளது.