TNPSC Thervupettagam

ஜல் ஜீவன் திட்டம் 2.0 நீட்டிப்பு

June 4 , 2026 15 days 181 0
  • மாநிலத்தில் ஜல் ஜீவன் திட்டம் (JJM) 2.0 திட்டத்தை நீட்டித்துச் செயல்படுத்துவதற்காக மத்திய அரசும் தமிழ்நாடு அரசும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளன.
  • ஜல் ஜீவன் திட்டத்தை 2028 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • ஊரகப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்குச் செயல்படும் குடிநீர் குழாய் இணைப்புகளை (FHTCs) வழங்குவதையும், பாதுகாப்பான குடிநீரை உறுதி செய்வதையும் ஜல் ஜீவன் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இத்திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 46.71 லட்சம் வீடுகளுக்குக் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டு, சுமார் 1.86 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர்.
  • மாநில அரசு 45 பல கிராம குடிநீர்த் திட்டங்கள் (MVSs), 56 கூட்டு குடிநீர்த் திட்டங்களில் (CWSSs) மறுசீரமைப்புப் பணிகள் மற்றும் 21,258 ஒற்றை கிராமத் திட்டங்களை (SVSs) செயல்படுத்தி வருகிறது.
  • இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, ஜல் ஜீவன் திட்டம் 2.0-ஐ செயல் படுத்துவதற்காகக் குடிநீர் மற்றும் சுகாதாரத் துறையிடமிருந்து (DDWS) முதற்கட்டமாக ₹2,177.27 கோடியைத் தமிழ்நாடு பெறும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்