மத்திய அமைச்சரவை கிராமப்புற குடிநீர் விநியோகத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி, ஜல் ஜீவன் திட்டத்தினை (JJM) 2028 ஆம் ஆண்டு டிசம்பர் வரை நீட்டித்துள்ளது.
JJM 2.0 எனப்படும் மேம்படுத்தப்பட்ட பதிப்பின் கீழ் மொத்த நிதி ஒதுக்கீடு ₹8.69 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் 2028 ஆம் ஆண்டிற்குள் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து 19.36 கோடி கிராமப்புற வீடுகளுக்கும் செயல்பாட்டுக் குழாய் நீர் இணைப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தற்போது, இந்த இயக்கத்தின் கீழ் சுமார் 15.80 கோடி வீடுகளுக்கு (81.61%) ஏற்கனவே குழாய் நீர் இணைப்புகள் உள்ளன.
நீர் ஆதாரத்திலிருந்து வீட்டு குழாய்கள் வரையிலான நீர் விநியோக முறைகளைக் வரைபடமாக்கவும் கண்காணிக்கவும் 'சுஜலம் பாரத்' என்ற தேசிய டிஜிட்டல் அமைப்பு பயன்படுத்தப்படும்.