ஜல் மஹோத்சவ் 2026 சர்வதேச மகளிர் தினத்தன்று (மார்ச் 8) ஜல் சக்தி துறை அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது.
ஜல் மஹோத்சவ் என்பது நீர் பாதுகாப்பு மற்றும் கிராமப்புற நீர் மேலாண்மையை மேம்படுத்துவதற்காக மார்ச் 8 முதல் 22 ஆம் தேதி வரை நடத்தப்படும் ஒரு நாடு தழுவிய பிரச்சாரமாகும்.
இது குடிநீர் மற்றும் துப்புரவுத் துறையால் ஜல் ஜீவன் திட்டத்தின் (JJM) கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் சமூகப் பங்கேற்பை உறுதி செய்ய ஜல் அர்ப்பண் திவாஸ், ஜல் சங்கல்ப் (நீர் உறுதிமொழி) மற்றும் ஜல் பந்தன் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன.
இந்தப் பிரச்சாரம் சிறந்த செயல்பாட்டிற்காக தேசிய, மாநில, மாவட்ட மற்றும் கிராமப் பஞ்சாயத்து நிலைகளில் செயல்படுகிறது.
கள ஆய்வுக் கருவிகளை (FTKs) பயன்படுத்தி நீர் பரிசோதனை மற்றும் மேலாண்மையில் லட்சக்கணக்கான பெண்கள் ஈடுபட்டுள்ளதால், இதில் பெண்களின் பங்கு முக்கியமானது.