மறுசுழற்சி மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்காக, இந்தியாவில் ஜவுளி கழிவு மதிப்பு சங்கிலியை வரைபடமாக்குவது குறித்த அறிக்கையை ஜவுளி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் உற்பத்தி செயல்முறைகள் மற்றும் நுகர்வோர் பயன்பாட்டிற்குப் பிறகு ஆண்டுதோறும் சுமார் 70.73 லட்சம் டன் ஜவுளி கழிவுகள் உருவாகின்றன.
வலுவான சேகரிப்பு மற்றும் மறுசுழற்சி அமைப்புகள் காரணமாக, உற்பத்தியின் போது ஏற்படும் கழிவுகளில் சுமார் 95% மீட்கப்படுகிறது.
நூற்புத் துறை அதன் உற்பத்தியின் போது ஏற்படும் கழிவுகளை மீண்டும் பயன்படுத்துவதில் கிட்டத்தட்ட 100% வெற்றியை எட்டியுள்ளது.
மொத்த ஜவுளிக் கழிவுகளில் சுமார் 70% குப்பைக் கிடங்குகளுக்குச் செல்லாமல் மறுசுழற்சி செய்யப் படுகிறது அல்லது பிற பயன்பாடுகளுக்கு மாற்றப்படுகிறது.
ஜவுளி மறுசுழற்சி சந்தை 2030-ஆம் ஆண்டிற்குள் 3.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டக்கூடும் மற்றும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் 'பசுமை வேலைவாய்ப்புகளை' உருவாக்கும்.