புது டெல்லியில் உள்ள சம்முக், அபிமஞ்ச், ஆப்கி கல்ப் மற்றும் லிட்டில் தியேட்டர் குரூப் (LTG) அரங்குகளில் குழந்தைகளுக்கான நாடகத் திருவிழாவான ஜஷ்னே பச்பான் என்ற நிகழ்ச்சியின் 14வது பதிப்பு நடைபெற்றது.
இது தேசிய நாடகப் பள்ளியின் (NSD – National School of Drama) கல்வியில் நாடகம் (Theatre in Education-TIE) என்ற நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
டிஜிட்டல் ஊடகங்களின் காரணமாக நவீன சகாப்தத்தில் நாடகங்கள் அதன் முக்கியத்துவத்தை இழந்ததையடுத்து அதன் மேன்மையை மீண்டும் பெறச் செய்வதே இதன் நோக்கமாகும்.
இந்நிகழ்ச்சி இந்தியாவிலிருந்து 21 நாடகத் தயாரிப்புகளையும் இலங்கை (வார்த்தைகளற்றது ) சுவிட்சர்லாந்து (ஆங்கிலம்) மற்றும் இந்தோனேஷியா (ஜாவானிஸ்) உள்ளிட்ட 3 வெளிநாட்டு குழுக்கள் இதில் பங்கேற்பதையும் உறுதி படுத்தும்.