ஜூலை 01 ஆம் தேதி முதல், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள உணவக உரிமையாளர்கள் அதிக இடைத்தரகுக் கட்டணம் மற்றும் மறைமுகமாக வசூலிக்கப்படும் கட்டணங்கள் காரணமாக ஸ்விக்கி மற்றும் சோமாட்டோ ஆகிய செயலிகளைப் பயன்படுத்துவதை நிறுத்தியுள்ளனர்.
இனி அதற்குப் பதிலாக, கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட உணவு விநியோகச் செயலியான ஜாரோஸ் என்பதைப் பயன்படுத்தத் தொடங்கினர்.
ஜாரோஸ் ஆனது, உணவுக் கூடங்களுக்கு 1,500 ரூபாய் (+GST), உணவகங்களுக்கு 3,000 ரூபாய் (+GST) என்ற வீதத்தில் ஒரு ஆர்டருக்கு இடைத் தரகு இல்லாமல் குறைந்த விலையிலான மாதாந்திரச் சந்தா மாதிரியில் இயங்குகிறது.
சுமார் 50 உணவகங்கள் இந்தத் தளத்தில் இணைந்துள்ளதன் மூலம் முந்தைய சேவை வழங்கீட்டு நிறுவனங்கள் மாதந்தோறும் 20,000 முதல் 30,000 ரூபாய் வசூலித்ததுடன் ஒப்பிடும் போது 90% செலவுகளை மிச்சப் படுத்தியுள்ளன.
திருச்செங்கோடு மற்றும் இராசிபுரத்தில் உள்ள இதர உணவக உரிமையாளர்களும் விரைவில் ஜாரோஸ் செயலியில் சேரத் திட்டமிட்டுள்ளனர்.