ஜார்க்கண்ட் மாநிலத்தின் புலம்பெயர்ந்தோர் குறித்த முதல் கணக்கெடுப்பு
February 1 , 2023 821 days 449 0
ஜார்க்கண்ட் மாநில அரசானது, 2021 ஆம் ஆண்டில் மாநில மற்றும் பொறுப்பு மிக்க இடம் பெயர்வு முன்னெடுப்பினைத் தொடங்கியது.
இந்தக் கணக்கெடுப்பானது, அந்தமாநிலத்தில் புலம்பெயர்ந்தோர் குறித்த வலுவான தரவுத்தளத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ள நிலையில், இது இந்த முன்னெடுப்பின் ஒரு பகுதியாகும்.
இந்த ஆய்வானது, புலம்பெயர்விற்கானக் காரணத்தை அடையாளம் காண்பதற்கு அந்த மாநில அரசிற்கு உதவும்.
மாநில அளவிலான கொள்கையை உருவாக்குவதற்கு இந்தக் கணக்கெடுப்பின் மதிப்பீடுகள் பயன்படுத்தப்பட உள்ளது.
கோவிட் பெருந்தொற்று கால நெருக்கடியின் போது சுமார் 8.5 லட்சம் அளவிலான புலம்பெயர்ந்தோர் தங்களது சொந்த மாநிலமான ஜார்க்கண்ட் மாநிலத்திற்குத் திரும்பினர்.