TNPSC Thervupettagam

ஜார்க்கண்ட் ஸ்தாபன தினம் - நவம்பர் 15

November 16 , 2026 4 days 66 0
  • பீகார் மறுசீரமைப்புச் சட்டம், 2000-த்தின் கீழ் தெற்கு பீகாரிலிருந்து பிரிக்கப்பட்டு 2000 ஆம் ஆண்டு நவம்பர் 15 அன்று ஜார்க்கண்ட் தனி மாநிலமாக உருவாக்கப்பட்டு, இந்தியாவின் 28-வது மாநிலமானது.
  • பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் (1875 ஆம் ஆண்டு நவம்பர் 15) பிறந்தநாளில் இம்மாநிலம் உருவாக்கப்பட்டது.
  • பிரிட்டிஷ் ஆட்சி மற்றும் பழங்குடியின சமூகங்கள் சுரண்டப்படுவதற்கு எதிராக உல்குலான் (மாபெரும் கிளர்ச்சி) இயக்கத்தை (1899–1900) அவர் வழிநடத்தினார்.
  • பிர்சா முண்டா 'தரத்தி ஆபா' (பூமியின் தந்தை) என்று பிரபலமாக அழைக்கப்படுகிறார்.
  • முக்கியமாக சோட்டா நாக்பூர் பீடபூமியில் அமைந்துள்ள இம்மாநிலத்தின் மிக உயரமான சிகரம் பரசநாத் குன்று ஆகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்