TNPSC Thervupettagam

ஜிஎஸ்டி தினம் 2026 - ஜூலை 01

July 2 , 2026 9 hrs 0 min 14 0
  • சரக்கு மற்றும் சேவை வரியானது (GST) 2017 ஆம் ஆண்டு ஜூலை 1 அன்று தொடங்கப் பட்டதைக் குறிக்கும் வகையில், 2026 ஆம் ஆண்டு ஜூலை 1 அன்று 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
  • ஜிஎஸ்டி 17 மறைமுக வரிகள் மற்றும் 13 உபவரிகளை ஓர் ஒருங்கிணைந்த வரிக் கட்டமைப்பின் மூலம் மாற்றி, "ஒரே நாடு, ஒரே வரி" என்ற முறையை அறிமுகப் படுத்தியது.
  • ஜிஎஸ்டி என்பது சரக்குகள் மற்றும் சேவைகளின் விநியோகத்தின் மீதான இலக்கு அடிப்படையிலான ஒரு மறைமுக வரியாகும் என்பதோடு இது மத்திய ஜிஎஸ்டி (CGST), மாநில ஜிஎஸ்டி (SGST) மற்றும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (IGST) ஆகியவற்றின் மூலம் நிர்வகிக்கப் படுகிறது.
  • ஜிஎஸ்டி குழுமமானது ஜிஎஸ்டி கொள்கையை வழி நடத்துகிறது மற்றும் மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான கூட்டுறவு கூட்டாட்சியை ஊக்குவிக்கிறது.
  • 2017 ஆம் ஆண்டில் 66.5 லட்சமாக இருந்த ஜிஎஸ்டி வரி செலுத்துவோரின் எண்ணிக்கை, 2026 ஆம் ஆண்டு மே மாத நிலவரப்படி சுமார் 1.65 கோடியாக உயர்ந்துள்ளது என்பதோடு இது பொருளாதாரத்தின் அதிகப்படியான முறைப்படுத்தலை மிக நன்கு பிரதிபலிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்