TNPSC Thervupettagam
July 13 , 2021 1441 days 549 0
  • கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் ஜிகா வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளன.
  • ஜிகா வைரசானது, ஏடிஸ் இனத்தை சேர்ந்த வைரஸ் தொற்று ஏற்பட்ட கொசுக்களால் குறிப்பாக ஏடிஸ் எஜிப்தி கொசுக்களால் பெரும்பாலும் பரப்பப்படுகிறது.
  • ஏடிஸ் கொசுக்கள் டெங்கு, சிக்குன்குன்யா மற்றும் மஞ்சள் காய்ச்சல் போன்ற நோய்களையும் பரப்புகின்றன.
  • இவை வழக்கமாக பகல் நேரங்களில் கடிக்கின்றன, அதிலும் பெரும்பாலும் அதிகாலை (அ) பிற்பகல் நேரங்களில் கடிக்கின்றன.
  • தொற்று ஏற்பட்ட  நபராலும் இந்த வைரஸ் பரவுகிறது.
  • இந்த வைரசானது 1947 ஆம் ஆண்டில் உகாண்டா நாட்டில் உள்ள குரங்குகளில் முதன் முறையாக கண்டறியப்பட்டது.
  • இது 1952 ஆம் ஆண்டில் உகாண்டா மற்றும்  ஐக்கிய தான்சானியக் குடியரசு ஆகிய நாடுகளில் மனிதர்களில் கண்டறியப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்