TNPSC Thervupettagam

ஜிப்ரால்டர் குரங்குகளில் மண் தின்னும் பழக்கம்

May 1 , 2026 2 days 80 0
  • சுற்றுலாப் பயணிகளால் வழங்கப்படும் சத்துணவற்ற உணவுகளின் பாதிப்புகளைக் குறைப்பதற்காக, ஜிப்ரால்டரில் உள்ள பார்பரி மக்காக்குகள் (ஒரு வகை குரங்குகள்) மண்ணை சாப்பிடுவதை (மண் உண்ணல்) அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
  • இது ஐரோப்பாவில் காணப்படும் ஒரே ஒரு காட்டு விலங்கின வகையாகும், மேலும் இவை ஆசியாவிற்கு வெளியே வாழும் ஒரே குரங்கு இனமாகும்.
  • இது இயற்கையாக அல்ஜீரியா மற்றும் மொராக்கோவின் அட்லஸ் மலைகளில் காணப்படுகிறது மற்றும் ஜிப்ரால்டரில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • மலைகள், பாறைப் பகுதிகள் மற்றும் தேவதாரு காடுகளில் வாழும் இவை பகல் நேரங்களில் சுறுசுறுப்பாக இருக்கும்.
  • இது அனைத்துண்ணி வகையைச் சேர்ந்தது, வாலற்றது (பார்பரி ஏப் என அழைக்கப் படுகிறது) மற்றும் குட்டிகளை குழுவாகப் பராமரிக்கும் பண்பைக் கொண்டுள்ளது.
  • IUCN செந்நிறப் பட்டியலின்படி, பார்பரி மக்காக்கின் பாதுகாப்பு நிலை அருகி வரும் இனம் என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்