சிறுபான்மையினர் விவகார அமைச்சகத்தின் உலகளாவிய பார்சி பதிவு இயக்கத்தின் மூலம் சுமார் 300 புதிய பதிவுகள் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜியோ பார்சி திட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்தியாவில் பார்சி மக்களின் மக்கள் தொகை குறைவதைத் தடுப்பதற்காக, 2013-14 ஆம் ஆண்டில் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
கருவுறுதல் சிகிச்சை, கர்ப்பகால பராமரிப்பு மற்றும் குடும்ப ஆதரவு சேவைகள் போன்ற அறிவியல் ரீதியான உதவிகள் மூலம் மக்கள் தொகையை அதிகரிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
தகுதியுள்ள பார்சி தம்பதிகளுக்கு நேரடிப் பணப்பரிமாற்றம் (DBT) மூலம் நிதி உதவி வழங்கப் படுகிறது.
மாநில அரசுகள் மற்றும் பார்சி நிறுவனங்களின் ஆதரவுடன், பயோ மெட்ரிக் சரிபார்ப்பு முறை மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.