குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் 40 நபர்களுக்கு இந்த விருதினை வழங்குவதற்கு வேண்டி தனது ஒப்புதலை வழங்கியுள்ளார்.
இந்த விருதுகளில் உத்தம் ஜீவன் ரக்சா பதக்கம் (8), சர்வோட்டம் ஜீவன் ரக்சா பதக்கம் (1) மற்றும் ஜீவன் ரக்சா பதக்கம் (31) ஆகியவை உள்ளடங்கும்.
சர்வோட்டம் ஜீவன் ரக்சா பதக்கம் என்பதில் ஒரு விருதானது கேரளாவைச் சேர்ந்த மறைந்த முகம்மது முதின் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஜீவன் ரக்சா பதக்கம் என்ற விருதுகள் மற்றொரு நபரைக் காப்பாற்றுவதன் மூலம் மனிதர்களின் நடவடிக்கையை வெளிப்படுத்திய நபர்களைக் கௌரவிப்பதற்காக வேண்டி வழங்கப் படுகின்றது.