ஜெயந்த் நர்லிகர் - இந்திய வானியற்பியலாளர்
May 23 , 2025
14 hrs 0 min
49
- இந்தியாவின் மிகப் புகழ்பெற்ற வானியற்பியலாளர்களில் ஒருவரான டாக்டர் ஜெயந்த் நர்லிகர் காலமானார்.
- 2003 ஆம் ஆண்டில் ஓய்வு பெறும் வரை அவர் பல்கலைக் கழகங்களுக்கு இடைப்பட்ட வானியல் மற்றும் வானியற்பியல் மையத்தின் (IUCAA) இயக்குநராக இருந்தார்.
- 2012 ஆம் ஆண்டில், மூன்றாம் உலக அறிவியல் அகாடமியானது, ஒரு சிறப்பு அறிவியல் மையத்தினை அமைத்ததற்காக இவருக்கு விருது வழங்கியது.
- அவர் தனது அறிவியல் புனைக் கதைகளுக்கும் புகழ் பெற்றவர்.
- அவரின் பிரபலமான அறிவியல் படைப்புகளுக்காக என அவருக்கு 1996 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவின் கலிங்கா விருது வழங்கப்பட்டது.
- டாக்டர் நர்லிகருக்கு 1965 ஆம் ஆண்டில் அவரது 26 வயதில் அவருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப் பட்டது.
- 2004 ஆம் ஆண்டில் அவருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது.
- மகாராஷ்டிர மாநில அரசானது 2011 ஆம் ஆண்டில் மாநிலத்தின் மிக உயரிய குடிமை விருதான மகாராஷ்டிரா பூஷண் விருதை அவருக்கு வழங்கி கௌரவித்தது.
- 2014 ஆம் ஆண்டில், சாகித்ய அகாடமியானது, பிராந்திய மொழியில் (மராத்தி) எழுதப் பட்ட அவரது சுயசரிதையை, அதன் உயரியப் பரிசிற்குத் தேர்ந்தெடுத்தது.

Post Views:
49