TNPSC Thervupettagam

ஜெய்ப்பூரில் கிரிக்கெட் மைதானம்

February 9 , 2022 1516 days 696 0
  • இராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட் மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் சௌரவ் கங்குலி ஆகியோர் இணைந்து ஜெய்ப்பூரில் உலகின் 3வது மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தினை நிறுவுவதற்கான அடிக்கல்லினை நாட்டினர்.
  • இந்த மைதானமானது இந்தியாவின் 2வது பெரிய கிரிக்கெட் மைதானமாகவும், உலகின் 3வது மிகப்பெரிய மைதானமாகவும் திகழும்.
  • இந்தப் புதிய மைதானமானது ஜெய்ப்பூர் – டெல்லி நெடுஞ்சாலையின் அருகே இராஜஸ்தான் கிரிக்கெட் அகாடமியினால் கட்டமைக்கப்படும்.
  • தற்போது, அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானமானது (முன்னதாக மோதேரா மைதானம்) உலகின் மிகப்பெரிய மைதானமாக திகழ்கிறது.
  • உலகின் 2வது மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்