ஜெர்மனியின் சக்திவாய்ந்த X-கதிர்வீச்சு லேசர் கருவி
September 2 , 2017 2897 days 1079 0
ஐரோப்பிய X-கதிர்வீச்சு ஃபிரீ எலக்ட்ரான் லேசர் (European x-ray Free Electron Laser - XFEL) கருவி ஜெர்மனியில் உள்ள ஹம்பர்க் நகரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கருவியானது ஒரு நொடியில் 27,000 X-கதிர் கீற்றுகளை வெளிப்படுத்தும். இதன் மூலம், ஒரு அணுவில் உள்ள மிக நுண்ணிய பகுதியையும் ஒரு நொடியில் தெளிவாக படமெடுக்க முடியும்.
தாவர ஒளிச்சேர்க்கையின் போது சூரிய ஆற்றலை கிரகிக்கும் மூலக்கூறுகளை ஆராய்ச்சி செய்ய இக்கருவியை விஞ்ஞானிகள் பயன்படுத்த உள்ளனர்.
மேலும், சூரியனை ஆராய்ச்சி செய்யவும், வைரஸ்கள், செல்கள் போன்றவற்றினை ஆராயவும் இக்கருவியை விஞ்ஞானிகள் பயன்படுத்த உள்ளனர்.