ஜேபி மோர்கன் - மெட்டாவேர்ஸ் என்ற டிஜிட்டல் உலகில் விற்பனையகம் அமைத்த முதல் வங்கி
February 21 , 2022 1273 days 546 0
ஜேபி மோர்கன் மெட்டாவேர்ஸ் என்ற டிஜிட்டல் உலகில் ஒரு விற்பனையகத்தினை அமைத்த உலகின் முதல் வங்கியாக மாறியுள்ளது.
அமெரிக்காவின் இந்த மிகப்பெரிய வங்கியானது பிளாக்செயின் அடிப்படையிலான டீசென்ட்ராலாந்து உலகில் ஓர் அமைப்பினை திறந்துள்ளது.
மெட்டாவெர்ஸ் என்பது ஒரு மெய்நிகர் உலகாகும்.
இதில் பயனர்கள் தங்கள் மாதிரி அவதார உருவங்களின் மூலம் சமூகமயமாக்கல், ஷாப்பிங் (பொருட்கள் வாங்குதல்) அல்லது நிகழ்வுகளில் கலந்து கொள்வது போன்ற பல செயல்பாடுகளைச் செய்யலாம்.