அமெரிக்க மூலக்கூறு உயிரியலாளர் ஜேம்ஸ் டீவே வாட்சன் காலமானார்.
பிரான்சிஸ் கிரிக்குடன் சேர்ந்து, டிஆக்ஸிரைபோநியூக்ளிக் அமிலத்தின் (டிஎன்ஏ) இரட்டை - சுருள் அமைப்பைக் கண்டுபிடித்தவராக அவர் பாராட்டப்பட்டார்.
வாட்சன், கிரிக் மற்றும் மாரிஸ் வில்கின்ஸ் ஆகியோர் தங்கள் கண்டுபிடிப்புக்காக 1962 ஆம் ஆண்டு உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசை இணைந்து வென்றனர்.
பின்னர் அவர் கோல்ட் ஸ்பிரிங் ஹார்பர் ஆய்வகத்தின் வேந்தரானார் மற்றும் 2008 ஆண்டில் தனது சொந்த டிஎன்ஏவின் ஆறு பில்லியன் அடிப்படை இணைகளை வரிசைப் படுத்தி, மனித ஜீனோம் திட்டத்திற்கு பங்களித்தார்.
அவர் The Double Helix என்ற புத்தகத்தை எழுதினார் என்பதோடு மேலும் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் கல்வி கற்பித்ததோடு பல்வேறு தலைமுறைகளைச் சார்ந்த மரபியலாளர்களுக்கு தனது அறிவினைப் பகிர்ந்தார்.