உணவகத் திரட்டு மற்றும் உணவு விநியோக சேவை நிறுவனமான ஜொமேட்டோ மற்றும் உயிரி டீசல் உற்பத்தியாளரான பயோடி எனர்ஜி என்ற நிறுவனம் ஆகியவை பயன்படுத்திய சமையல் எண்ணெயிலிருந்து உயிரி டீசலை உற்பத்தி செய்ய ஒரு கூட்டாண்மை ஒப்பந்தத்தைச் செய்துள்ளன.
ஜொமேட்டோநிறுவனம் நாடு முழுவதும் உள்ள உணவகங்களிலிருந்துப் பயன்படுத்திய சமையல் எண்ணெயை சேகரித்துப் பதப்படுத்தி உயிரி டீசலாக மாற்றும்.
காய்கறி எண்ணெயை அதிக அளவில் பயன்படுத்துவோர் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
இது 2022 ஆம் ஆண்டிற்குள் 220 கோடி லிட்டர் என்ற அளவிற்கு பயன்படுத்திய சமையல் எண்ணெயிலிருந்து உயிரி டீசல் உற்பத்தி செய்யும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால் உயர் இரத்த அழுத்தம், பெருந்தமனி தடிப்பு, அல்சைமர் மற்றும் கல்லீரல் வியாதிகள் போன்ற நோய்கள் ஏற்படலாம்.