ஜோத்பூரின் சற்றேறத்தாழ 200 ஆண்டுகள் பழமையான 'மோஜாரி' (Mojari) கைவினைப் பொருளுக்கு மத்திய அரசிடமிருந்து புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
ஜோத்புரி மோஜாரி என்பது ராஜஸ்தானின் ஜோத்பூரைச் சேர்ந்த பாரம்பரியமாக கையால் செய்யப்பட்ட பாதணிகளாகும் என்பதோடு இது முக்கியமாக ஜினாகர் சமூகத்தினரால் தயாரிக்கப்படுகிறது.
ஒட்டகம், ஆடு, பசு மற்றும் எருமை ஆகியவற்றின் தோல்களைப் பயன்படுத்திச் செய்யப்படும் இந்தக் கைவினைப் பொருள் நெகிழ்வானதாகவும், நீடித்து உழைக்கக் கூடியதாகவும், ராஜஸ்தானின் பருவநிலைக்கு ஏற்றதாகவும் பெயர் பெற்றது.
வரலாற்று ரீதியாக, ஜினாகர் சமூகத்தினர் படைகளுக்காக ஜீன் (சிறு சேணங்கள்) மற்றும் மயான் (தோலால் செய்யப்பட்ட வாள்/கத்தி உறைகள்) ஆகியவற்றைத் தயாரித்து வந்துள்ளனர்.