டாக்டர் ஐடா S. ஸ்கட்டர் மனிதநேயச் சொற்பொழிவு விருது
December 15 , 2021 1333 days 683 0
10வது வருடாந்திர டாக்டர் ஐடா S. ஸ்கட்டர் மனிதநேயச் சொற்பொழிவு விருதானது (2021) அசிம் பிரேம்ஜி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவ்விருது வேலூரின் கிறித்துவ மருத்துவக் கல்லூரி மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த வேலூர் CMC அறக்கட்டளை ஆகியவற்றால் இணைந்து கூட்டாக உருவாக்கப் பட்டது ஆகும்.
அசிம் பிரேம்ஜி, விப்ரோ லிமிடெட் என்ற நிறுவனத்தின் நிறுவனத் தலைவரும் அசிம் பிரேம்ஜி என்ற அறக்கட்டளையின் நிறுவனரும் ஆவார்.
அசிம் பிரேம்ஜி சமூகத்திற்கு ஆற்றிய தொன்றிற்கு ஒரு அங்கீகாரமளிக்கும் வகையில் இந்த விருதானது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
2001 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த அறக்கட்டளையானது,
கல்வித்துறையில் மகத்தானப் பங்களிப்பு அளித்து வருகிறது.
பெங்களூருவில் அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறது மற்றும்
பல இலாப நோக்கமற்ற நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்கி ஆதரவளிக்கிறது.