டாக்டர் கலாம் ஸ்மிருதி சர்வதேச சிறப்புத்துவ விருது 2019
September 18 , 2019 2137 days 853 0
வங்காள தேசத்தின் பிரதமரான ஷேக் ஹசீனாவுக்கு டாக்காவில் 2019 ஆம் ஆண்டின் டாக்டர் கலாம் ஸ்மிருதி சர்வதேச சிறப்புத்துவ விருது வழங்கப்பட்டது.
அமைதியான & வளமான தெற்காசியாவைப் பற்றிய அவருடைய பார்வை மற்றும் இந்தியாவிற்கும் வங்காள தேசத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பை வளர்ப்பதில் அவர் ஆற்றியப் பங்களிப்பிற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
இந்த விருதானது முன்னாள் இந்திய குடியரசுத் தலைவரான டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் நினைவாக நிறுவப்பட்டுள்ளது.
தங்களது நாடு சிறந்து விளங்குவதற்காக, தங்களது துறைகளில் சிறப்புத்துவத்தை வெளிப்படுத்தும் அரசியல் தலைவர்கள் அல்லது தலைவர்களைக் கௌரவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் இந்த விருது வழங்கப்படுகின்றது.
இந்த விருதானது டேல் வியூ என்ற அமைப்பால் வழங்கப்படுகின்றது. இந்த அமைப்பானது அறக்கட்டளை சமூகச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு அரசு சாரா அமைப்பாகும்.