டாக்டர் ஹர்ஷ் வர்தன் – Stop TB Partnership வாரியத்தின் தலைவர்
March 19 , 2021 1586 days 598 0
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் (Stop TB Partnership) ‘காசநோயை ஒழிப்பதற்கான பங்குதார வாரியத்தின்’ தலைவராக நியமிக்கப் பட்டு உள்ளார்.
இப்பொறுப்பு 2025 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் இருந்து காசநோயை ஒழிப்பதற்காக அவர் மேற்கொண்டு வரும் பங்களிப்பினை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப் பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து 3 வருடங்களுக்கு இந்த உலக அமைப்பிற்கு அவர் தலைமையேற்றுப் பணி புரிவார்.
இது ஒரு சர்வதேச அமைப்பாகும். இது காசநோய்க்கு எதிராக போராடுவதற்காக பல நாடுகளை ஒன்று திரட்டும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது.
இந்த அமைப்பு “காசநோய் இல்லாத உலகம்” எனும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.