டாக்டர் A.P.J. அப்துல் கலாம் பிரேர்னா ஸ்தல் ஆனது விசாகப்பட்டினத்திலுள்ள கடல் சார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகத்தில் திறக்கப் பட்டுள்ளது.
பாரத ரத்னா விருது பெற்ற டாக்டர்A.P.J. அப்துல்கலாம் அவர்களுடைய 90வது பிறந்த நாளினை நினைவு கூறும் விதமாகவும் ஆசாதி கா அம்ரித் மகோத்சவின் நினைவாகவும் பிரேர்னா ஸ்தல் திறக்கப் பட்டது.
கடல்சார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகத்தின் தயாரிப்புகளான வருணாஸ்திரா, மேம்படுத்தப்பட்ட இலகுரக கடற்கணை (Torpedo Advanced Light) மற்றும் மாரீச் டெகாய் (Maareech decoy - போலி ஆயுதம்) போன்றவையும் இந்த ஆய்வகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப் படுகின்றன.
இந்த ஆய்வகமானது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் கீழ் இயங்கும் ஒரு முக்கிய கடல்சார் ஆராய்ச்சி ஆய்வகமாகும்.