டாடா எஃகு நிறுவனத்தின் நெதர்லாந்து ஆலை - எதிர்கால தொழிற்சாலை
January 12 , 2019 2403 days 747 0
உலகப் பொருளாதார மன்றமானது (WEF - World Economic Forum) டாடா எஃகு நிறுவனத்தின் நெதர்லாந்தில் உள்ள Ijmuiden ஆலை மற்றும் 6 இதர ஆலைகளை “உற்பத்தி கலங்கரை விளக்கங்கள்” என்று உயர் தொழில்நுட்பமுடைய உற்பத்தித் திட்டங்களாக அங்கீகரித்திருக்கின்றது.
டாடா எஃகு நிறுவனம் வெற்றிகரமான எதிர்காலத்திற்குத் தேவைப்படும் மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து ஏற்றுக் கொண்டுள்ளது. மேலும் இது நிதி மற்றும் செயல்பாட்டுத் தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது.
2018 ஆம் ஆண்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளை மதிப்பிடுகையில், இது WEF அமைப்பின் புகழ்பெற்ற சமூகத்தில் இணைந்துள்ளது.
2017 ஆம் ஆண்டு உலகப் பொருளாதார மன்றமானது உற்பத்திக்கான எதிர்காலத்தை உருவாக்குதல் என்ற முன்னெடுப்பின் கீழ் முன்னணி அறிவுசார் உற்பத்தி நிறுவனங்களின் (கலங்கரை விளக்கங்கள்) ஒரு வலையமைப்பை அமைத்துள்ளது.
இது உற்பத்தித் துறையில் அறிவுப் பரிமாற்றத்தை அனுமதிக்கிறது. மேலும் இது உற்பத்தித் துறையில் “நான்காம் தொழிற்புரட்சிகளுக்கான” பகுதிகளில் ஒத்துழைப்பையும் ஊக்குவிக்கிறது.