TNPSC Thervupettagam

டாடா மாற்றமிகு புதுமைக்கான பரிசு 2025

December 29 , 2025 2 days 33 0
  • படுபித்ரி V. சிவபிரசாத் (தேசிய உயிரியல் அறிவியல் மையம்), பாலசுப்பிரமணியன் கோபால் மற்றும் அம்பரீஷ் கோஷ் (இந்திய அறிவியல் கல்வி நிறுவனம்) ஆகிய பெங்களூருவைச் சேர்ந்த மூன்று அறிவியலாளர்கள்  2025 ஆம் ஆண்டிற்கான டாடா மாற்றமிகு புதுமைக்கான பரிசை வென்றனர்.
  • உணவுப் பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் சுகாதார நலப் பராமரிப்பு ஆகியவற்றில் ஆராய்ச்சி மேற்கொண்டதற்காக அவர்களுக்கு முறையே விருது வழங்கி அங்கீகரிக்கப்பட்டது.
  • தங்கள் ஆராய்ச்சி மற்றும் அதன் நிஜ உலகத் தாக்கத்தை மேம்படுத்துவதற்காக ஒவ்வொருவருக்கும் 2 கோடி ரூபாய் வழங்கப்படும்.
  • சிவபிரசாத் மன அழுத்த சகிப்புத்தன்மை மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்த அரிசியில் மேல்மரபியல் (எபிஜெனெடிக்) பொறியியலில் பணியாற்றுகிறார்.
  • கோபால் உயிரி பொறியியல் நுட்பத்திற்குட்படுத்தப்பட்ட ஈ. கோலையைப் பயன்படுத்தி நிலையான இரசாயன உற்பத்தியை உருவாக்கினார் என்ற நிலையில் மேலும் கோஷ் இலக்கு சார்ந்த புற்றுநோய் சிகிச்சைக்கு காந்தத் திறன் கொண்ட நுண் எந்திரங்களைப் பயன்படுத்தினார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்