TNPSC Thervupettagam

டாலர் குறியீடு வீழ்ச்சி

January 31 , 2026 14 days 70 0
  • அமெரிக்க டாலர் மதிப்பானது சமீபத்தில் நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்த நிலைக்குச் சரிந்தது.
  • முக்கிய உலக நாணயங்களுக்கு எதிராக டாலரின் மதிப்பை அளவிடும் அமெரிக்க டாலர் குறியீடானது, 1.4% சரிந்து 95.77 ஆகக் குறைந்தது என்பதோடு இது பிப்ரவரி 2022-க்குப் பிறகு அதன் மிகக் குறைந்த மதிப்பாகும்.
  • வர்த்தகம்சார்  பதட்டங்கள், உள்நாட்டு அரசியல் நிச்சயமற்றத் தன்மை மற்றும் ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் சுதந்திரம் குறித்த கவலைகள் ஆகியவற்றுடன் இந்த வீழ்ச்சி தொடர்புடையது.
  • தென் கொரிய மற்றும் கனடா நாட்டின் இறக்குமதிகள் மீதான வரிகளை உயர்த்தும் திட்டங்களை டிரம்ப் அறிவித்தார்.
  • ஜப்பானிய யென் ஒரு டாலருக்கு 152 ஆக வலுவடைந்தது, அதே நேரத்தில் யூரோ 1.20 டாலருக்கு மேல் உயர்ந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்