அருணாச்சலப் பிரதேசத்தின் பாரம்பரிய கத்தி டாவோ மற்றும் ஹைலேண்ட் சீஸ் யாக் சுர்பி 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் புவி சார் குறியீட்டினை (GI) பெற்றன.
டாவோ பழங்குடியினக் கைவினைஞர்களால் பாரம்பரியத் தயாரிப்பு முறைகளைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படுகிறது என்பதோடு மேலும் இது கலாச்சார அடையாளம் மற்றும் கைவினைத் திறனைக் குறிக்கிறது.
பிரதானமாக மேற்கு காமெங் மற்றும் தவாங் மாவட்டங்களில், மிகவும் அடர்த்தியான அமைப்பு, அதிக ஊட்டச்சத்து மற்றும் நீண்ட நாள் கெடாமல் தாங்கும் தன்மை கொண்ட யாக் சுர்பி என்பது பழங்குடியின அருணாச்சல யாக் பாலில் இருந்து தயாரிக்கப் படும் ஒரு பால் சார்ந்தப் பொருள் ஆகும்.
அருணாச்சலப் பிரதேசத்தில் இதுவரை சுமார் 20 புவி சார் குறியீடு பெற்ற பொருட்கள் உள்ளன என்பதோடுமேலும் 2030 ஆம் ஆண்டிற்குள் 50 என்ற எண்ணிக்கையை எட்ட அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.