இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) ஆனது எட்டு நிறுவனங்களை எண்ணிம/டிஜிட்டல் தகவல் தொடர்பு இணைப்பு மதிப்பீட்டு முகமைகளாக (DCRAs) பதிவு செய்துள்ளது.
இது 2024 ஆம் ஆண்டு டிஜிட்டல் இணைப்பு விதிமுறைகளுக்கான கட்டமைப்புகளின் மதிப்பீட்டின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.
இந்தப் பதிவுகள் ஆனது 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதியன்று வழங்கப்பட்டன என்ற நிலையில் இது அதன் விதிமுறைகளுக்கு இணங்க, மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.
பதிவு செய்யப்பட்ட எட்டு DCRA நிறுவனங்களில் Ardom Towergen, Crest Digitel, CTL Infocom, ESTEX Telecom, Frog Cellsat, Phistream Consulting, Shaurrya Teleservices மற்றும் TUV SUD South Asia ஆகியவை அடங்கும்.
இந்த நிறுவனங்கள் கட்டிடங்களில் உள்ள டிஜிட்டல் உள்கட்டமைப்பை மதிப்பிடும் மற்றும் TRAI ஆணையத்தினால் வெளியிடப்பட்ட தரப்படுத்தப்பட்ட முறையின் அடிப்படையில் நட்சத்திர மதிப்பீடுகளை வழங்கும்.
இந்த மதிப்பீடுகள் ஆனது ஒளியிழைகள் தயார்நிலை, கைபேசி மற்றும் Wi-Fi பரவல், பிராட்பேண்ட் சேவையின் வேகம் மற்றும் ஒட்டுமொத்த டிஜிட்டல் பயனர் அனுபவம் போன்ற அளவுருக்களின் அடிப்படையில் அமையும்.