மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகமானது டிஜிட்டல் கட்டண மதிப்பீட்டு அட்டையின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவானது (SBI) தொடர்ந்து 3 மாதங்களாக முதலிடத்தில் உள்ளது.
இந்த மதிப்பீட்டு அட்டையானது பல்வேறு டிஜிட்டல் கூறுகள் குறித்த வணிக வங்கிகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்கின்றது.
SBI ஆனது 640 மில்லியன் மதிப்பிலான அதிக அளவிலான யுபிஐ பாரிமாற்றத்தைப் பதிவு செய்ததன் மூலம் முன்னணியில் உள்ள பணம் அனுப்பும் வங்கியாக தொடர்ந்து திகழ்கின்றது.
பற்று அட்டைகளை அதிக அளவில் வழங்கிய வங்கிகளில் SBI வங்கியும் ஒன்றாகும்.