TNPSC Thervupettagam

டிஜிட்டல் கைது மோசடிகள் மீதான விதிகள்

August 12 , 2026 21 hrs 0 min 49 0
  • அதிகரித்து வரும் டிஜிட்டல் கைது மோசடிகளைக் கையாள்வதற்காக, இடைத்தரகர் கணக்குகளுக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை (SOPs) வகுக்குமாறு இந்திய ரிசர்வ் வங்கிக்கு இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், நாடு முழுவதும் இ-ஜீரோ முதல் தகவல் அறிக்கைகள் (e-Zero FIRs) மற்றும் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீட்டுக் கட்டமைப்புகளை நடைமுறைப்படுத்தவும் உத்தரவிட்டது.
  • மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் (I4C) சமர்ப்பித்த நான்காவது நிலை அறிக்கையைப் பரிசீலித்த பின்னரே இந்த உத்தரவுகளைப் பிறப்பித்தது.
  • மேலும், டிஜிட்டல் கைது மோசடிகளுக்குப் பலியாகும் மக்களுக்காக, பகிரப்பட்ட பொறுப்பு மற்றும் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீட்டுக் கட்டமைப்பை அறிமுகப் படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு மத்திய அரசிடம் அது கேட்டுக் கொண்டது.
  • அதன் முக்கிய உத்தரவுகளில், சைபர் மோசடி மூலம் கிடைக்கும் பணத்தை சட்ட விரோதமாக மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் இடைத்தரகர் வங்கிக் கணக்குகளைக் கையாள்வதற்கான ஒரு நிலையான செயல்பாட்டு நடைமுறையை (SOP) நான்கு வாரங்களுக்குள் வகுக்குமாறு இந்திய ரிசர்வ் வங்கியை (RBI) நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்