டிஜிட்டல் கொடுப்பனவு அறிக்கையில் மோசடி மற்றும் இடர் மேலாண்மை
September 6 , 2020 1798 days 674 0
இதை தேசிய மென்பொருள் மற்றும் சேவை வழங்கு நிறுவனங்களின் சங்கம், இந்தியத் தரவுப் பாதுகாப்பு மன்றம் மற்றும் பேபால் நிறுவனம் இணைந்து உருவாக்கி உள்ளன.
மோசடிகளின் வளர்ச்சி மற்றும் கட்டண மோசடி ஆகியவற்றின் மீது ஒரு பார்வையை இந்த அறிக்கை அளிக்கிறது.
முக்கிய கண்டுபிடிப்புகள்
மின்னணு வணிகச் சந்தையானது 50 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து (2018 இல்) 200 பில்லியன் அமெரிக்க டாலராக (2026 ஆம் ஆண்டில்) உயரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இணையப் பயனர்களின் எண்ணிக்கையானது 560 மில்லியனில் இருந்து (2018 ஆம் ஆண்டில்) 835 மில்லியனாக உயரும் (2023 ஆம் ஆண்டில்) என்று எதிர்பார்க்கப் படுகிறது.
2019 ஆம் ஆண்டு மார்ச் 31 நிலவரப்படி, 925 மில்லியன் பற்று அட்டைகள் (டெபிட் கார்டு) மற்றும் 47 மில்லியன் கடன் அட்டைகள் (கிரெடிட் கார்டு), சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் வழங்கப் பட்டுள்ளன.