G20 அமைப்பின் பாதுகாப்பான இணையம் என்ற ஒரு பிரச்சாரத்திற்காக, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்துடன் (MeitY) இணைந்து தனது கூட்டாண்மையினை நிறுவ உள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
அந்த அமைச்சகத்துடன் இணைந்து, மெட்டா நிறுவனம் #டிஜிட்டல் சுரக்சா என்ற ஒரு பிரச்சாரத்தினைத் தொடங்கியுள்ளது.
இந்தப் பிரச்சாரத்தின் மூலம், மெட்டா நிறுவனமானது இணையத்தில் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது என்பது குறித்த மூல ஆதாரங்களை இந்திய மொழிகளில் உருவாக்கிப் பகிர்ந்து கொள்ள உள்ளது.
எண்ணிம உலகில் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.