இந்திய அரசானது 2023 ஆம் ஆண்டு DPDP சட்டத்தின் செயல்பாட்டினை நிறைவு செய்து, 2025 ஆம் ஆண்டு DPDP விதிகளை அறிவித்தது.
டிஜிட்டல் ரீதியான தனிப்பட்ட தரவை பொறுப்புடன் பயன்படுத்துவதற்காக குடி மக்களை மையமாகக் கொண்ட மற்றும் புதுமைக்கு ஏற்ற கட்டமைப்பைச் சட்டம் மற்றும் விதிகள் உருவாக்குகின்றன.
இது SARAL வடிவமைப்பு, அதாவது எளிமையான, அணுகக்கூடிய, ஏற்புடைய மற்றும் செயல்படக்கூடிய வடிவமைப்பை பின்பற்றி தரவுச் செயலாக்க அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கான உரிமைகளுக்கான (தரவுகளுக்கு உரிமையானவர்கள்) கடமைகளை நிறுவுகிறது.
ஒப்புதல் மற்றும் வெளிப்படைத்தன்மை, நோக்க வரம்பு, தரவுக் குறைப்பு, துல்லியம், சேமிப்பக வரம்பு, பாதுகாப்பு சார்ந்த விதிமுறைகள் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய ஏழு முக்கிய கொள்கைகள் கட்டமைப்பை வழிநடத்துகின்றன.
இந்த விதிகள் தனிப்பட்ட தரவை அணுக, திருத்த, புதுப்பிக்க அல்லது அழிப்பதற்கான தனிநபர்களின் உரிமைகளை வலுப்படுத்துகின்றன என்பதோடுமேலும் இவை இதற்கான பிரதிநிதிகளை நியமிக்கவும் அனுமதிக்கின்றன.