தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் வாட்ஸ் அப் ஆகியவை இணைந்து டிஜிட்டல் திறன் வாகையர் திட்டத்தினைத் தொடங்குவதற்கான தனது கூட்டணியைப் பற்றி அறிவித்துள்ளன.
இது இந்திய இளைஞர்களை வேலைவாய்ப்பிற்கு ஏற்றவர்களாக மாற்றுவதற்காக அவர்களுக்கு டிஜிட்டல் திறன்களைப் பயிற்றுவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தக் கூட்டிணைவானது வாட்ஸ்அப் டிஜிட்டல் திறன் அகாடமி, பிரதான் மந்திரி கௌசல் கேந்த்ரா மற்றும் வாட்ஸ்அப் வர்த்தக செயலிப் பயிற்சி வகுப்புகள் என்ற வகையில் ஒத்துழைப்பிற்கான இரு பரவலான பிரிவுகளை அடையாளம் காண்கிறது.