டிஜிட்டல் முறையிலான கடன் வழங்கீடுகளுக்கு விதிக்கப்பட்ட விதிமுறைகள்
August 14 , 2022 1107 days 486 0
இந்திய ரிசர்வ் வங்கியானது டிஜிட்டல் முறையில் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது.
இது டிஜிட்டல் கடன் வழங்கீடு (WGDL) தொடர்பான பணிக்குழுவின் பரிந்துரைகளைப் பின்பற்றுகிறது.
அனைத்து டிஜிட்டல் முறையிலான கடன்களும் ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் மூலம் மட்டுமே வழங்கப்பட வேண்டும் மற்றும் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும் என்று இந்த விதிமுறைகள் குறிப்பிடுகின்றன.
கடன் வழங்கீட்டுச் சேவை வழங்குநர்கள் அல்லது பிற மூன்றாம் தரப்பினர்களின் குறுக்கீடு இதில் தடை செய்யப் பட்டுள்ளது.