TNPSC Thervupettagam

டிஜிட்டல் ஹஜ் புனித யாத்திரை – இந்தியா

December 2 , 2019 2015 days 658 0
  • ஹஜ் பயணம் மேற்கொள்ளும் புனித யாத்ரீகர்களுக்கான முழு செயல்முறையையும் முற்றிலும் டிஜிட்டல்மயமாக்கம் செய்த முதலாவது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
  • நிகழ்நேர (ஆன்லைன்) விண்ணப்பம், மின்னணு நுழைவு இசைவு, ஹஜ் கைபேசி செயலி, ‘இ-மாசிஹா’ சுகாதார வசதி, “மின்னணு முறையிலான பயணச் சுமை குறியிடல்” ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
  • 2020 ஆம் ஆண்டில் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் 2 லட்சம் இந்திய முஸ்லிம்கள் மெக்கா மற்றும் மெதினா ஆகிய நகரங்களில் தங்குமிடம் மற்றும் போக்குவரத்து தொடர்பான தகவல்களை இந்தியாவிலேயே பெற இருக்கின்றனர்.
  • மத்திய சிறுபான்மை விவகாரத் துறை அமைச்சரான முக்தார் அப்பாஸ் நக்வி என்பவர் இந்தியாவிற்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையிலான இருதரப்பு வருடாந்திர 2020 ஆம் ஆண்டு ஹஜ் ஒப்பந்தத்தில் ஜெட்டாஹ் நகரில் கையெழுத்திட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்