டிஜிபூட்டி நடத்தை விதிமுறைகள் பார்வையாளர் அந்தஸ்து
September 19 , 2020 1924 days 880 0
இந்தியாவானது டிஜிபூட்டி நடத்தை விதிமுறைகள் / ஜெட்டா திருத்தத்தில் ஒரு பார்வையாளர் நாடாக இணைந்துள்ளது.
இது இந்தியப் பெருங்கடல் பகுதியில் செங்கடல், ஏடன் வளைகுடா, ஆப்பிரிக்காவின் கிழக்குக் கடற்கரைத் தீவு நாடுகள் ஆகியவற்றைச் சுற்றியுள்ள 19 நாடுகளைக் கொண்டுள்ள கடல்சார் விவகாரங்கள் குறித்த ஒரு குழுவாகும்.
இந்தக் குழுவில் பார்வையாளர்களாக இருக்கும் ஜப்பான், நார்வே, ஐக்கிய இராஜ்ஜியம், அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் இந்தியா இணைந்துள்ளது.
டிஜிபூட்டி நடத்தை விதிமுறைகள் என்பது 2008 ஆம் ஆண்டில் சர்வதேசக் கடல்சார் அமைப்பினால் ஏற்படுத்தப்பட்ட ஒரு பிராந்தியக் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தமாகும்.