இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமானது மும்பையிலுள்ள பந்த்ரா குர்லா வளாகத்தில் டிஜி மண்டலத்தினைத் திறந்துள்ளது.
இந்த மண்டலத்திலுள்ள காப்பீட்டுத் திட்டங்களை இணையத்தில் வாங்கிடவும், காப்பீட்டுக் கட்டணத்தினைச் செலுத்தவும் மற்றும் பிற சேவைகளைப் பெற்றிடவும் வேண்டி வாடிக்கையாளர்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் டிஜி மண்டல வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள ஒரு கணிப்பொறியகம் மூலமாக தனது திட்டங்கள் மற்றும் சேவைகள் குறித்த தகவல்களை ஆயுள் காப்பீட்டுக் கழகம் வழங்கும்.