சீனாவின் ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய மனித இனத்தைச் சேர்ந்த ஒரு பழங்கால மனிதனின் மண்டை ஓட்டினைக் கண்டெடுத்துள்ளதாகக் கூறியுள்ளனர்.
இந்த மண்டை ஓடானது வடகிழக்குச் சீனாவின் ஹார்பின் எனும் நகரில் கண்டெடுக்கப் பட்டுள்ளது.
இது “டிராகன் மனிதன்” (அ) ஹோமோ லோங்கி என அழைக்கப் படுகிறது.
இந்தப் பெயரானது ஹார்பின் நகரம் அமைந்துள்ள சீனாவின் ஹீலோங்ஜியாங் மாகாணத்தில் (Heilongjiang province) உள்ள லோங் ஜியாங் அல்லது டிராகன் நதியின் பெயரிலிருந்துப் பெறப்பட்டதாகும்.
இந்த மண்டை ஓடானது சுமார் 1,46,000 ஆண்டுகள் வரையில் பழமையானதாக இருக்கலாம்.